தனக்காக ஒரு திருமணம், பெற்றோருக்காக ஒரு திருமணம், ஒரே மேடையில்

0 146927

மத்திய பிரதேசத்தில் தான் காதலித்த பெண்ணையும், பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணையும் ஒரே மேடையில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்த ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பெத்துல் மாவட்டத்தில் கெரியா கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்ற இளைஞர் போபாலில் படிக்கும் போது அங்கு ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென சந்தீப்புக்கு வீட்டில் அவரது பெற்றோர் பெண் பார்க்கும் படலம் தொடங்கி மணப்பெண்ணையும் தேர்வு செய்துவிட்டனர்.

முடிவில் இருவருக்கும் மணமுடிக்க நடவடிக்கை எடுக்கும் போது சந்தீப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர் பிடிவாதமாக இருந்ததால் சந்தீப் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். 

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பஞ்சாயத்துக்கு சென்றது. சந்தீப் குடும்பம், சந்தீப் காதலியின் குடும்பம், சந்தீப் பெற்றோர் பார்த்த பெண்ணின் குடும்பத்துடன் பஞ்சாயத்தார் சமரசத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இரண்டு இளம் பெண்களும் சந்தீப்புடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் அவரது திருமணம் கெரியா கிராமத்தில் உறவினர்கள் புடைசூழ நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments