டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர் டிராவிட் , சாதனையை ட்வீட் செய்த ஐசிசி
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செய்த சாதனை ஒன்றை ஐசிசி அமைப்பு ட்வீட் செய்துள்ளது.
அந்த ட்வீட்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு யாரை விடவும் அதிகப் பந்துகளை எதிர்கொண்டு விளையாடியவர் டிராவிட் என்று தெரிவித்துள்ளது.
அவர் 31ஆயிரத்து 258 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வேறு எந்த பேட்ஸ்மேனும் 30 ஆயிரம் பந்துகளை கூட எதிர்கொண்டதில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
1996 முதல் 2012 வரை விளையாடிய ராகுல் டிராவிட் 164 டெஸ்டுகளில் பங்கேற்றுள்ளார். 200 டெஸ்டுகளில் விளையாடிய சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29ஆயிரத்து 437 பந்துகளையும் 166 டெஸ்டுகளில் விளையாடிய காலிஸ் 28 ஆயிரத்து 903 பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார்கள்.
3️⃣1️⃣,2️⃣5️⃣8️⃣ – Rahul Dravid has faced more balls than anyone else in Test cricket.
— ICC (@ICC) July 11, 2020
No other batsman has even crossed 30,000 deliveries!
Dravid faced an average of 190.6 balls per Test match across his career ?#ICCHallOfFame pic.twitter.com/G4D6LWBqLV
Comments