முதன்முறையாக முக கவசம் அணிந்த அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முதன்முறையாக முக கவசம் அணிந்தவாறு பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
வாஷிங்டனுக்கு வெளியே அமைந்துள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களையும், சுகாதார ஊழியர்களையும் டிரம்ப் சந்தித்து பேசினார். வால்டர் ரீடு தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் போது அவர் முக கவசம் அணிந்து இருந்தார்.
அவருடன் வந்த பாதுகாப்பு படையினரும் முக கவசம் அணிந்து இருந்தனர். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் தொடங்கிய நாளில் இருந்து டிரம்ப் முக கவசம் அணியாமல் தான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆனால் தற்போது அவர் முக கவசம் அணிந்து இருப்பது பலரது புருவத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
In a first, Trump dons mask as US' COVID death toll surpasses 1,34,000
— ANI Digital (@ani_digital) July 11, 2020
Read @ANI Story | https://t.co/SKgS6l4ILb pic.twitter.com/bLzEZyrlGg
Comments