தமிழ்நாடு முழுவதும் இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்

0 5554

தமிழ்நாடு முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது. பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூலை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், எவ்வித தளர்வுகளும் அற்ற தீவிர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி, எவ்வித தளர்வுகளும் அற்ற, ஒருநாள் தீவிர முழு ஊரடங்கு, இன்று அமல்படுத்தப்படுகிறது. திங்கட்கிழமை, அதிகாலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீடிக்கிறது.

இந்த தளர்வற்ற முழு ஊரடங்கின்போது, அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் தவிர, பிற, அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், காவல்துறை, மருத்துவமனை வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு தவிர, மற்ற எதற்காகவும், வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என தமிழ்நாடு அரசும், காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments