சாத்தான்குளம் வழக்கு-கோவில்பட்டி கிளைச்சிறையில் நீதிபதி பாரதிதாசன் மீண்டும் விசாரணை

0 12872

சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயராஜ், பென்னிக்ஸ் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச்சிறையில் நீதிபதி பாரதிதாசன் மீண்டும் விசாரணை நடத்தினார்.

சிறைக் காவலர்களை வெளியே காத்திருக்க செய்து விட்டு, கைதிகளிடம் தனித்தனியாக விசாரணை செய்த நீதிபதி, ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறைக்கு கொண்டு வரப்பட்ட போதும், சிறையில் இருந்த போதும் இருந்த நிலை என்ன என்பது குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் காயங்கள் இருந்ததா, அவர்களது மன நிலை எவ்வாறு இருந்தது, காவல்துறையினர் தாக்கியது குறித்து ஏதேனும்  பகிர்ந்து கொண்டனரா, சிறையில் ஏதும் தொந்தரவு அளிக்கப்பட்டதா என்பவை குறித்தும் விசாரணை நடத்தி, கைதிகள் அளித்த பதில்களை நீதிபதி பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிறை உதவி கண்காணிப்பாளர், சிறை காவலர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார். இதனிடையே கோவில்பட்டி கிளைச்சிறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments