கொரோனா நோயாளிகளுக்காக முதன்முறையாக அட்டை பெட்டிகள் மூலம் படுக்கைகள்

0 3130

இந்திய மருத்துவமுறைகள் மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பது தவறான கருத்து என கூறியுள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலமும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

5000 படுக்கை வசதியுடன் இந்த மையம் தயாராகி வருகிறது, தற்போது 1000 படுக்கை வசதியுடன் ஒரு பிளாக் தயார் நிலையில் உள்ளது, இந்த மையத்தில் தான் கொரோனா நோயாளிகளுக்காக முதன்முறையாக அட்டை பெட்டிகள் மூலம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது, கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து தளங்களும் கண்காணிக்கப்படுகிறது என ராதாகிருஷ்ணன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments