தாய்க்காக ஆண் வேடம் பூண்டு தெருத்தெருவாக சுக்குமல்லி கசாயம் விற்கும் மகள்
கிருஷ்ணகிரியில் கணவனை இழந்து வறுமையின் பிடிக்குள் சிக்கிய பெண் ஒருவர், 7ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு ஆண் வேடமிட்டு சுக்குமல்லி கசாயம் விற்க அனுப்பி வருகிறார்.
புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ரகமத்பானு என்ற அந்தப் பெண்ணின் கணவர் 6 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இவர்களது 3 குழந்தைகளில் மூத்த பெண்ணுக்கு திருமணம் முடிந்த நிலையில், 7ஆம் வகுப்பு படிக்கும் மகள், 2வது படிக்கும் மகனோடு வறுமையுடன் போராடி வருகிறார் ரகமத்பானு. ஊரடங்கால் வருமானம் முற்றிலும் முடங்கிப் போகவே, சுக்கு கசாயம் தயாரித்து தெருத்தெருவாக விற்று வருகிறார் ரகமத் பானு.
தாய்க்கு உதவும் வகையில் 2 குழந்தைகளும் தங்கள் பங்குக்கு சுக்குமல்லி கசாயம் விற்க முன்வந்துள்ளனர். இதில் பெண் குழந்தையின் பாதுகாப்பை குறித்து கவலைப்பட்ட ரகமத்பானு, தலைமுடியை வெட்டி, சட்டை, பேண்ட் அணிவித்து ஆண் போல் மாற்றியுள்ளார். தற்போது 2 குழந்தைகளும் தெருத்தெருவாக குட்டி சைக்கிள் ஒன்றில் சுக்குமல்லி கசாயம் விற்று வருகின்றனர்.
Comments