தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் : அதிகாரிகள் புகார்

0 1575

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டு பக்தர்களிடம் மோசடி செய்யப்படுவதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்று ஏற்கனவே மோசடியில் ஈடுபட்ட 20 போலி இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ttddarshans.com என்ற போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனால் தேவஸ்தான அதிகாரிகள் மோசடி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். தரிசனம், அறை முன்பதிவு உள்ளிட்ட தேவஸ்தான சேவைகளை பெற tirupatibalaji.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ அல்லது இலவச அழைப்பு எண்களை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments