அமெரிக்க, வட கொரிய அதிபர்கள் சந்தித்துப்பேச வாய்ப்பில்லை - கிம் யோ ஜாங்
அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் மீண்டும் சந்தித்துப் பேச வாய்ப்பில்லை என வடகொரியாவின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரும், அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரியுமான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இரு நாட்டுத் தலைவர்களும் மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இரண்டு தலைவர்களின் முடிவுகள் மற்றும் அறிவிப்புகளின் அடிப்படையில், எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதற்கும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பலனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள கிம் யோ ஜாங், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடரவேண்டுமானால் அமெரிக்கா தனது பிடிவாதத்தைக் கைவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments