புனே நகரில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மகாராஷ்ட்ரா மாநிலம் புனே நகரில் இரண்டு கட்டமாக பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது.
புனே மற்றும் பிம்ப்ரி, சின்ச்வாட் உள்ளிட்ட புறநகர்ப்பகுதிகளில் கொரோனா பாதிப்பு என்ணிக்கை 35 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதையடுத்து துணை முதலமைச்சர் அஜித் பவார் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.
பொது மக்கள் ஆபத்தை உணராமல் விதிகளை மீறி நடந்துக் கொண்டால் முழு ஊரடங்கை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்படும் என்பதால் மதுவை வாங்கி வைக்க ஏராளமானோர் மதுக்கடைகள் முன்பு திரண்டிருந்தனர்
Comments