சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 13 முதல் ஐடி நிறுவனங்கள் 50சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

0 5522

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 50சதவீத பணியாளர்களுடன் வரும் 13 ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போதைய ஊரடங்கு நடைமுறைப்படி பணி செய்வதில் சிரமம் இருப்பதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்ததன் பேரில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 90% பணியாளர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பொது போக்குவரத்து வசதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முடிந்தவரை பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய ஊக்குவிக்குமாறும், பணியாளர்கள் அடிக்கடி கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments