தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 51 காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்

0 4797

25 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 51 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும், அவர்களில் சிலருக்கு பணி உயர்வு வழங்கியும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

உதவி காவல் கண்காணிப்பாளர்களான  ஐபிஎஸ் அதிகாரிகள் 14பேர் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அடையாறு துணை காவல் கண்காணிப்பாளர் பகலவன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், மாதவரம் துணை கண்காணிப்பாளர் ரவாளி பிரியா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உதவி காவல் கண்கணிப்பாளராக இருக்கும் ஹரி கிரண் பதவி உயர்வில், சென்னை தி.நகர் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.நாகர்கோயில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை அண்ணாநகர் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments