புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கண்டறிந்து இலவச ரேசன் பொருட்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

0 1890

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை இருந்தாலும், இல்லா விட்டாலும் இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில், மீண்டும் விசா ரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவை அருகே துடியலூரில் புலம் பெயர்ந்த தொழிலாளியின் மனைவிக்கு ஆட்டோவில் காயங்களுடன் பிறந்த குழந்தையை கண்டுபிடித்து, உரிய சிகிச்சை அளிக்க  உத்தர விட்டனர்.

துடியலூர் சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். செங்கல் சூளை கொத்தடிமைகளை மீட்கக் கோரிய மற்றொரு வழக்கில், செங்கல் சூளை உரிமையாளர் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 13 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments