எல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை
கிழக்கு லடாக் எல்லை நிலவரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கால்வன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் இருந்து முதல்கட்ட இந்திய-சீன படைகளின் பின்வாங்குதல் குறித்து ராணுவ தளபதி எம்எம் நரவானே ராஜ்நாத் சிங்கிடம் விளக்கினார். கிழக்கு லடாக் மட்டுமின்றி அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் சிக்கிமில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் உள்ள நிலவரம் குறித்து விளக்கிய நரவானே, அங்கு எந்த சூழல் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மும்படை தலைமை தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி கராம்பீர் சிங், விமானப்படை தளபதி பதவுரியா மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Comments