"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ட்ரம்ப் தொடர்ந்து நம்புகிறார் - வெள்ளை மாளிகை
கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கான நம்பிக்கைக்குரிய மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்வதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்த மருந்தை, தானும் எடுத்துக்கொள்வதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறியுள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெய்லீ மெக்னனி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மிகவும் நம்பிக்கைக்குரிய நோய்த் தடுப்பு மருந்து என்று அதிபர் ட்ரம்ப் கூறியதாகவும், அதே சமயம் மருத்துவர் ஆலோசனை இன்றி யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments