முழுக்க, முழுக்க இயற்கை இடுபொருட்களைக் கொண்டு விவசாயம்

0 2822

ஈரோடு அருகே விவசாயத் தம்பதி ரசாயண உரங்களைக் கலக்காமல் முழுக்க முழுக்க இயற்கையான இடு பொருட்களைக் கொண்டு காய்கறிகள் விளைவித்து வருகின்றனர்.

மாமரத்துப் பாளையத்தைச் சேர்ந்த கோபால் - பூங்கொடி தம்பதி 3 ஏக்கர் சொந்த நிலத்தில் தாங்களே தயாரிக்கும் இயற்கை உரங்களையும் பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்தி, விவசாயம் செய்து வருகின்றனர்.

வெண்டைக்காய் புடலங்காய், கத்தரிக்காய் பரங்கிக்காய், பாகற்காய், அவரைக்காய், சின்ன வெங்காயம், பீர்க்கங்காய், கீரை வகைகள் உள்ளிட்டவற்றை விளைவித்து, ஈரோட்டில் உள்ள இயற்கை அங்காடிகளில் விநியோகம் செய்கின்றனர். நாட்டுக் கோழி, நாட்டு மாடு வளர்ப்பிலும் ஈடுபடும் கோபால் - பூங்கொடி தம்பதி, இத்தனை வேலைகளுக்கும் ஆட்களை பயன்படுத்தாமல் இருவர் மட்டுமே மேற்கொள்வதாகக் கூறுகின்றனர்.

இயற்கையோடு இணைந்த இந்த வாழ்க்கை தங்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுப்பதோடு மன நிறைவையும் கொடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments