கொரோனா பீதியால் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கிவிடப்பட்ட இளம் பெண் மாரடைப்பால் பலி

0 15484

கொரோனா அறிகுறி உள்ளதாகக் கூறி டெல்லியைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விட்ட நிலையில் அந்தப் பெண் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் இருந்து 19 வயதுப் பெண் அன்சிகா யாதவும் அவர் தாயும் ஜூன் 15ஆம் தேதி உத்தரப்பிரதேச அரசுப் பேருந்தில் சிகோபாபாத்துக்குச் சென்றனர்.

அப்போது அன்சிகாவுக்கு கொரோனா அறிகுறி உள்ளதாகக் கூறி மற்ற பயணிகள் கூச்சலிட்டதால் ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக அவரையும் அவர் தாயையும் பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டனர். இதையடுத்த அரைமணி நேரத்தில் அன்சிகா உயிரிழந்தார். அவர் இயற்கையாக இறந்ததாகக் கூறி மதுரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் உடற்கூறாய்வு அறிக்கையில் மாரடைப்பால் அவர் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேசக் காவல்துறைக்கு டெல்லி பெண்கள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில், பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாலும், அப்போது வீசிய அனல்காற்றாலும் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments