பயனர்களின் விவரங்களை திருட பயன்படுத்தப்படும் 11 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை
பயனர்களின் விவரங்களை திருடுவதற்கான ஜோக்கர் ஹேக்கர்களை கொண்ட 11 செயலிகளுக்கு தடை விதித்துள்ள கூகுள் நிறுவனம், அந்த செயலிகளை நீக்குமாறு ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
தொடர் கண்காணிப்பு மூலம் செயலிகள் வழியே ஊருடுவி பயனர்களின் தகவலைகளை திருடும் ஜோக்கர் மால்வேர்களை கூகுள் செக் பாயிண்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஹேக்கர்கள் பயனர்களுக்குத் தெரியாமல் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சேவைகளுக்கு நுழைந்து தகவல்களை திருட வாய்ப்புள்ளதால், பிளே ஸ்டோரில் இருந்து 11 செயலிகளை நீக்கி உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆன்ட்ராய்டு பயனர்கள் இந்த செயலிகளில் ஏதேனும் நிறுவி இருந்தால் உடனடியாக அன் இன்ஸ்டால் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments