ஒரே நாளில் சென்னையில் 1,216 பேருக்கு கொரோனா உறுதி

0 2390

சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த போதிலும், விருதுநகர், மதுரை, கள்ளக் குறிச்சி , தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்டை மாவட்டங்களான திருவள்ளூரில் 364 பேரும், செங்கல்பட்டில் புதிதாக 169 பேரும், காஞ்சிபுரத்தில் 67 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

விருதுநகரில் 289, மதுரையில் 262, கள்ளக்குறிச்சியில் 254, தூத்துக்குடியில் 196, திருநெல்வேலியில் 110, திருச்சி மற்றும் கன்னியாகுமரியில் 93 , சேலத்தில் 92, தேனியில் 90, வேலூரில் 87 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையை ஒப்பிடும்போது, பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ ருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த ஆயிரத்து 765 பேரில் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்து 169 பேர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments