மொத்த வியாபார சந்தையில் குவிந்த சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள்

0 3826

சென்னை கொத்தவால்சாவடி மொத்த வியாபார சந்தையில் சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். தனி மனித விலகலை கேள்வி குறியாக்கி விட்டு, எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி குவிந்த பொதுமக்களால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சரக்கு வாகனங்கள், சுமை இழுக்கும் வண்டிகளுக்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், நெரிசலை சமாளிக்க முடியாமல் காவலர்களும், ரோந்து வாகன போலீசாரும் திணறி வருகின்றனர்.

கொத்தவால்சாவடி சந்தையில் மளிகை, எண்ணெய் பொருட்கள் மொத்த வியாபார கடைகள் இயங்கி வரும் நிலையில், சிறு வியாபாரிகள் மட்டுமின்றி தனிநபர்களும் பொருட்கள் வாங்க அதிகமாக வருகின்றனர். மேலும், கடந்த மாதம் 19-ந் தேதிக்கு முன்பிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கடைகளின் எண்ணிக்கையில் சரிபாதியாக பிரித்து சுழற்சி முறையில் இயங்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தற்போது அது போன்று எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததே இந்த கூட்ட நெரிசலுக்கு காரணம் என்கின்றனர் அப்பகுதிவாசிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments