வெளிமாநில தொழிலாளர்களை நம்பித்தான் தமிழகம் பிழைக்க கூடிய நிலை உள்ளதாக உயர்நீதிமன்றம் வேதனை

0 3169

வெளிமாநில தொழிலாளர்களை நம்பித்தான் தமிழகம் பிழைக்க கூடிய நிலை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

வெளிமாநில தொழிலாளர்களுக்கு இடம் உணவு உள்ளிட்டவை வழங்க கோரிய வழக்கு விசாரணையின் போது விவசாயத்துக்கு கூட வெளிமாநில தொழிலாளர்களை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும், அவர்களை நம்பி செயல்படும் பல நிறுவனங்கள் தற்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக்வும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்குவது போல, வெளி மாநில மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கும் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அது குறித்து தமிழக அரசு வருகிற திங்கட்கிழமை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments