கொரோனா மட்டுமல்ல எந்த நோயையும் எதிர்க்கும்... சூரியன் இலவசமாக தரும் வைட்டமின் டி - யின் அருமை தெரியுமா? #VitaminD

0 18455

டலுக்குத் தேவையான வைட்டமின்களுள் மிகவும் முக்கியமானது வைட்டமின் டி. ஏறத்தாழ 200 மரபணுக்களின் செயல்பாடுகளை வைட்டமின் - டி தான் கட்டுப்படுத்துகிறது. உடல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திலும் வைட்டமின் டி- யின் பங்கு மிக முக்கியமானது.

உடலில் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளுள் அதிகம் ஏற்படுவதும் வைட்டமின் டி தான். 2018 - ம் ஆண்டு சுகாதாரத்துறை  வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் 80 - 90 சதவிகிதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் டி குறைபாடு அனைத்து வயது தரப்பினரையும் பாதித்துள்ளது. வைட்டமின் டி குறைபாட்டினால் இதய நோய், காச நோய்கள் உருவாகின்றன.  உடல் ஆரோக்கியமாக இயங்க எப்போதும் வைட்டமின் டி சத்து அதிகம் இருக்கும் உணவுப் பொருள்களை உண்ணுவது அவசியம்.

image

எல்சேவியர் பொது சுகாதார  இதழின் சமீபத்திய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களை கோவிட் - 19 பாதிப்பு தீவிரமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகிய இரண்டு காரணங்களும் தான் வைட்டமின் டி குறைபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  சூரிய வெளிச்சத்தில் நாம் வெளிப்படாமல் இருக்கும் காரணம் தான் வைட்டமின் டி குறைபாட்டுக்கு மிகமுக்கியக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நாம் வீட்டிலும், அலுவலகத்துக்குள் தான் பொழுதைக் கழிக்கிறோம். சூரிய வெளிச்சத்தில் நிற்பதென்பது அரிதான காரியமாக மாறிவிட்டது. நடைப்பயிற்சி மேற்கொண்டால் கூட சூரியன் மறைந்த பிறகு மங்கிய வெளிச்சத்தில் தான் ஓடுகிறோம். இந்தப் பழக்கம் தான் வைட்டமின் டி குறைபாட்டை அதிகப்படுவித்திவிடுகிறது.

அதனால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். வைட்டமின் டி குறைபாட்டை வெளிப்படுத்தும் ஐந்து ஆபத்தான அறிகுறிகளை அறிந்துகொள்வோம்...

1. காயங்கள் குணமாக நீண்டகாலம் ஆகுதல்

சர்க்கரை நோய் இருந்தால் மட்டுமல்ல வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தாலும் காயம் குணமாக நீண்ட காலம் ஆகும்.

2. பலவீனமான தசைகள் மற்றும் வலி ஏற்படுதல்

நாம் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டுதான் பணிபுரிகிறோம். உடல் உறுப்புகளின் இயக்கம் தடைப்படுகிறது. இதனால் தேவையான அளவு வைட்டமின் டி உடல் உறுப்புகளால் நுகரப்படுவதில்லை. இது தசை நார் வலி, எரிச்சலை ஏற்படுத்தும். சில நேரங்களில் புண்கள் கூட ஏற்பட்டுவிடும்.

image

3. முடி உதிர்தல்

அளவுக்கு அதிகமாக முடி உதிர்வது கூட வைட்டமின் டி குறைபாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சீரமின் உற்பத்தி வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுவதே காரணம் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

4. மூச்சு வாங்குதல்

கொரோனா நோய்த் தொற்று மட்டுமல்லாமல் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் கூட சுவாச பிரச்னைகளும் சுவாச நோய்களும் ஏற்படும். இது சுவாசிக் குழாயில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

5. உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியை நாம் இழந்துவிடுவோம். அதனால், அடிக்கடி தொற்றுநோய்களுக்கு ஆட்படுவதும் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

இந்தக் குறைபாட்டிலிருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் டி நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு, மீன், பாலாடைக்கட்டி ஆகியவற்றை வழக்கமாக உணவில் சேர்த்துக்கொண்டு, தினமும் குறிப்பிட்ட அளவு நேரம் சூரிய வெளிச்சத்தில் நின்றாலே வைட்டமின் டி குறைப்பாட்டில் சிக்காமல் தவிர்த்துக்கொள்ளலாம்!

உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்!
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments