கல்வி கற்பிப்பது புனிதமானது; கல்வியை அரசியல் ஆக்க வேண்டாம்-அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவது புனிதமானது என்றும் அதை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்டத்தை 30 விழுக்காடு குறைத்தது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே எனத் தெரிவித்துள்ளார்.
கல்வியாளர்களிடம் இருந்து பெற்ற கருத்துரைகளைப் பரிசீலித்து வல்லுநர் குழு செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இயக்கம், உள்ளாட்சி அமைப்பு, கூட்டாட்சி ஆகிய பாடங்கள் இல்லாததைச் சிலர் தவறாகச் சித்தரித்துவிட்டதாகவும், இந்தப் பாடங்களை வேண்டுமென்றே விலக்கிவிட்டதாகச் சிலர் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். கல்வியை அரசியல் ஆக்குவதை விட்டு விட்டு, கல்வி கற்றவர்கள் நிறைந்ததாக அரசியலை ஆக்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments