அரசு மனநல காப்பகத்தில் நோயாளிகள், ஊழியர்கள் என 28 பேருக்கு கொரோனா

0 2838

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நோயாளிகள், ஊழியர்கள் என 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மன நல காப்பகத்தில் 750மன நல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள  நோயாளிகள், பணியாளர்கள் என 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இங்கு பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள், நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இருந்து பணிக்கு வந்து செல்வதால் அவர்கள் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொற்று பாதித்தவர்களுக்கு காப்பகத்திலேயே தனிமைபடுத்தப்பட்டு வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்குள்ள மற்ற நோயாளிகள், ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் நோயாளிகள் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என வெளியான தகவலுக்கு அண்ணாநகர் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments