ஜம்மு எல்லைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள 6 புதிய பாலங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்
எல்லையில் இந்திய ராணுவத்துக்கு சாலைகள் உள்ளிட்டவற்றை அமைத்து தரும் எல்லை சாலைகள் அமைப்பால் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள 6 புதிய பாலங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.
43 கோடி ரூபாய் செலவில் அக்னூர் செக்டாரில் 4 பாலங்களும், ஜம்மு-ராஜ்புரா பகுதியில் 2 பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. அந்த பாலங்களை டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் ராஜ்நாத் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், தொலைதூர பகுதிகளில் உள்கட்டுமானங்களை மேம்படுத்துவதில், எல்லை சாலைகள் அமைப்பு முன்னணியில் இருப்பதாக பாராட்டினார்.
கொரோனா பரவலால் உலகம் முழுவதும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் தருணத்தில், பாலங்களை திறந்து வைப்பதை இனிமையான அனுபவமாக கருதுவதாகவும் ராஜ்நாத் கூறினார்.
இதேபோல் ஜம்மு-காஷ்மீரிலும், உத்தரகாண்டிலும் எல்லைச் சாலைகள் அமைப்பினரால் 1,691 கோடி ரூபாய் செலவில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.
Comments