ஆன்லைன் விற்பனை: நாட்டின் பெயரை குறிப்பிட அமேஸான்,பிளிப்கார்டிற்கு உத்தரவு
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் தயாரிக்கப்படும் நாட்டின் பெயரைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் அமேஸான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் DPIIT எனப்படும் இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விபரத்தைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விபரங்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் 2 முதல் 3 மாதங்கள் வரை கால நீட்டிப்பு கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments