உலக அளவில் 1.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக அளவில் மேலும் 2 லட்சத்து 13ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 21 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு நாடுகளில் 5ஆயிரத்து500 பேர் வரை கொரோனாவுக்கு பலியானதால், அந்த எண்ணிக்கையும் 5 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அமெரிக்கவில் ஒரே நாளில் 61ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதால், அந்நாட்டில் இதுவரை நோய்த்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 31 லட்சத்தை கடந்துள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் 41ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 1,187 பேரும், மெக்சிகோவில் 895 பேரும், அமெரிக்காவில் 890 பேரும் பலியாகியுள்ளனர்.
ரஷ்யா, பெரு, சிலி, கொலம்பியா, ஈரான், தென் ஆப்பிரிக்கா, லண்டன் ஆகிய நாடுகளிலும் 100-க்கும் அதிகமானோர் ஒரே நாளில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பில் இருந்து 70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
Tracking the COVID-19 spread https://t.co/7TlrASwBwd pic.twitter.com/LEas0QXbzj
— Reuters (@Reuters) July 9, 2020
Comments