"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
காஷ்மீரில் பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை
காஷ்மீரில் பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஷேக் வாசிம் பாரி என்பவர் பந்திப்போரா மாவட்ட பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராவார். நேற்று மாலை தனது கடையில் தந்தை மற்றும் சகோதரருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தப்பியோடிய பயங்கரவாதிகளை மாநில காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்து தேடி வருகின்றனர்.
ஷேக் வாசிம் பாரியின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த 10 போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் அப்பகுதியில் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ள காவல்துறை, 10 பேரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஷேக் வாசிம் பாரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments