வாடகையை கேட்டதால் வீட்டு உரிமையாளரை ஓட ஓட குத்திக் கொலை செய்த இளைஞன் கைது

0 61142

சென்னையை அடுத்த குன்றத்தூரில் 4 மாதமாக தராத வாடகையை கேட்டதால் வீட்டு உரிமையாளரை ஓட ஓட குத்திக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் குணசேகரன், குன்றத்தூரில் உள்ள தனது வீட்டின் கீழ் பகுதியில் தனியாக வசித்து வந்த நிலையில் மாடியை அஜித் மற்றும் அவரது குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

ஊரடங்கு காரணமாக அஜித் 4 மாதமாக வாடகை தரவில்லை என்று கூறப்படும் நிலையில், அதைக் கேட்க சென்ற குணசேகரனுக்கு அஜித்தின் பெற்றோருக்கும் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

நள்ளிரவு வீட்டுக்கு வந்த அஜித் இது குறித்து அறிந்து குணசேகரனுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உயிரை காப்பாற்றிக்கொள்ள சாலையில் ஓடிய குணசேகரனை துரத்திச் சென்று அஜித் குத்தி கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி, அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அஜித்தை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments