கொரோனா தொற்றில் இருந்து குணமான 106 வயது முதியவர்

0 1979

டெல்லியை சேர்ந்த 106 வயது முதியவர், கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளார். டெல்லியின் நவாப்காஞ்ச் பகுதியை (Nawabganj area) சேர்ந்த அவருடைய பெயர் முக்தார் அகமது ஆகும். 106 வயதான அவர், கொரோனா பாதித்த நிலையில் ஏப்ரல் மாதம் 14ம் தேதி அங்குள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பூரண குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 1918ம் ஆண்டில் ஸ்பானிஸ் வைரஸ் பரவியபோது, முக்தார் அகமதுக்கு 4 வயது சிறுவனாக இருந்த நிலையில் பாதிக்கப்பட்டார். அப்போது அளிக்கப்பட்ட சிகிச்சையில் முக்தார் அகமது குணமானார். இதையடுத்து கொரோனா தொற்றிலிருந்தும் பூரணமாக குணமாகியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முக்தார் அகமது, தனது வாழ்நாளில் கொரோனா போன்ற தொற்றை இதுவரை கண்டதில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments