65 அடி உயர கிரேன் உடைந்து விழுந்து விபத்து

0 4128

இங்கிலாந்தில் கட்டுமானப் பணியில் இருந்த கிரேன் உடைந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் லண்டனில் உள்ள போவின் கேல் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.

இந்தப் பணிகளுக்கா 65 அடி உயரமுள்ள கிரேன் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தக் கிரேன் திடீரென சரிந்து விழுந்து கீழ்ப்பகுதியில் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் இரு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

அந்த வீடுகளுக்குள் இருந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடந்த நிகழ்வுகள் குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments