குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என பாகிஸ்தான் பொய் தகவல் - இந்தியா கண்டனம்
பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ராணுவச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்பூஷண் ஜாதவ் வழக்கில், சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அவருடைய உரிமைகளை பாகிஸ்தான் அரசு மறுப்பதாக இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
குல்பூஷண் ஜாதவ் தமது வழக்கில் மேல் முறையீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய அதிகாரிகள் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் அல்லாத வேறு நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் அவரை சந்திக்கவும் இந்தியா தொடர்ந்து அனுமதி கோரி வருகிறது. சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்தி வைத்து நியாயமான விசாரணையை நடத்துமாறு உத்தரவிட்டு ஓராண்டாகியும் பாகிஸ்தான் அவருடைய உரிமைகளை மறுத்து வருகிறது.
குல்பூஷண் ஜாதவ் தமது வழக்கில் மேல் முறையீடு செய்ய விரும்பவில்லை என்று பாகிஸ்தான் கூறுவது உண்மைக்கு மாறான தகவல் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
Comments