சீனா எல்லைப் பிரச்சினையில் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டது - மைக் பாம்பியோ
எல்லைப் பிரச்சினையில் சீனா மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதாகவும் இந்தியாவும் அதற்குரிய முறையில் பதிலடி கொடுத்ததாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகின் விமர்சனங்களை விட தனது சொந்த நாட்டு மக்களின் சுதந்திர சிந்தனையைக் கண்டே சீனா பயப்படுவதாக குறிப்பிட்டார். கொரோனா வைரசை பரப்பியதில் உண்மையை உலகிற்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் மூடி மறைத்த சீனா உலகம் முழுவதும் நோயைப் பரப்பிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மற்றஅண்டை நாடுகளின் எல்லைகளை ஆக்ரமித்துள்ள சீனா இந்திய எல்லையில் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டதாகவும் அதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்திருப்பதாகவும் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை குறித்த தாம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியதையும் பாம்பியோ நினைவு கூர்ந்தார்.தங்கள் எல்லை எங்கே முடிகிறது என்பதை உணர்ந்த அண்டை நாடுகள் குறைவு என்றும் தங்கள் இறையாண்மை எதுவரை முடிகிறதோ அதில் திருப்தி கொண்டிருப்பது அரிதானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட அண்டை நாடான இந்தியாவிடம் சீனா நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது என்றும் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
சீனா எல்லைப் பிரச்சினையில் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டது - மைக் பாம்பியோ #China | #India | #US | #MikePompeo https://t.co/sxsN1j1Bt4
— Polimer News (@polimernews) July 9, 2020
Comments