8 போலீசாரைக் கொன்ற ரவுடிகளின் தலைவன் விகாஸ் துபே டெல்லிக்கு ஓட்டம்

0 3588

உத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பலின் தலைவன் விகாஸ் துபே டெல்லி தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவனைத் தேடி ஃபரிதாபாதில் அவன் தங்கியிருந்த விடுதியை போலீசார் சோதனை நடத்தி என்கவுண்டரில் அவன் உறவினரான அமர் துபேயை சுட்டுக் கொன்றதுடன் மூன்று பேரை கைது செய்தனர்.

அந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணையை அடுத்து விகாஸ் துபே டெல்லி தப்பிச் சென்று சில அரசியல் பிரமுகர்கள் பாதுகாப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டெல்லியிலும் கான்புரிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் விகாஸ் துபேயை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.டெல்லியில் சில இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய பின்னரும் விகாஸ் துபேயின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments