நீரவ் மோடியின் ரூ.330 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்
வங்கி மோசடி நடத்தி விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடிக்கு சொந்தமான 330 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 15000 கோடி ரூபாய் ரூபாய் மோசடி செய்த வழக்கில் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில் ஏற்கனவே 2348 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இந்த நிலையில் மும்பை, லண்டன் மற்றும் யுஏஇ-ல் உள்ள அவரது பிளாட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Comments