WHO நிபுணர் குழு சீனா வருவதற்கு அனுமதி அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0 3618
கொரோனாவின் ஆதிமூலத்தை கண்டுபிடிக்க WHO நிபுணர் குழு சீனா செல்கிறது

கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டுபிடிக்க, உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நிபுணர்கள் வருவதற்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு, உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்களின வருகைக்கு அனுமதி அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் ((Zhao Lijian)) பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிபுணர்கள் 3 நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற அவர், கொரோனா குறித்த அண்மைத் தகவல்கள், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் அவர்களுக்கு தேவையான விவரங்களை வழங்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments