132 ஆண்டு பழமை வாய்ந்த தெலங்கானா தலைமைச்செயலக கட்டிடம் இடித்து தரைமட்டம்
132 ஆண்டு பழமை வாய்ந்த தெலங்கானா மாநில தலைமைச் செயலகம் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டு உள்ளது.
25 ஏக்கர் நிலத்தில் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் 10 பிளாக்குகளுடன் இயங்கி வந்த தலைமைச்செயலக கட்டிடத்தை இடிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கை, அம்மாநில உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்திருந்தது.
கம்பீரமாக காட்சி தந்த தலைமைச்செயலக கட்டிடத்தை இடிக்கும் பணியை துவங்குவதற்கு முன், சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரவு துவங்கிய இடிப்பு பணி, காலையில் முழுமையாக முடிந்தது.
இதனிடையே, 500 கோடி ரூபாய் செலவில், 6 லட்சம் சதுர அடியில் அதி நவீன வசதிகளுடன் தெலங்கானாவின் புதிய தலைமைச்செயலகம் உருவாகிறது. ஏற்கனவே, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டு விட்டதால், விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என தெலங்கானா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments