நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது - தமிழக அரசு
நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காதவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் வாடுவதாக தெரிவித்தார். குறைந்தபட்ச நிவாரணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், நலவாரியத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு தான் நிவாரணம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த வழக்கும் நாதஸ்வர, தவில் வித்வான்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற வழக்கும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Comments