தமிழ்நாட்டில் இன்று 3756 பேருக்கு கொரோனா உறுதி

0 8301
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலி

தமிழகத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 756 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை, 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, கடந்த 6 - ஆவது நாளாக கணிசமாக குறைந்துள்ளது. ஒரே நாளில் சுமார் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதால், மொத்தம் 14 லட்சத்து 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் முடிந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்ததால், இதுவரை 74 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் "டிஸ்சார்ஜ்" செய்யப்பட்டு விட்டனர்.

ஒரே நாளில் 3 ஆயிரத்து 756 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரி வித்துள்ள சுகாதாரத்துறை, இவர்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 28 பேரும், பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 35 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

எனவே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

சென்னையில் 26 பேர் உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 64 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 15 பெண்கள் உள்பட 43 பேர் பலிஆனார்கள்.

சென்னையைச்சேர்ந்த 23 வயது இளம்பெண், ராணிப் பேட்டையில் 36 வயது ஆண் மற்றும் 8 பெண்கள் உள்பட 21 பேர் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பலி , ஆயிரத்து 700 ஆக அதிகரித்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 47 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 7 - வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மதுரையில்  ஒரே நாளில் அதிகபட்சமாக 379 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் புதிதாக ஆயிரத்து 261 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. கொரோனா பாதிப்பு சென்னையில் 72 ஆயிரத்து 500 -ஐ எட்டிய போதிலும் சுமார் 50 ஆயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையின் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் புதிதாக 273 பேரும், திருவள்ளூரில் 300 பேரும், காஞ்சிபுரத்தில் 133 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

வேலூரில் 160, தூத்துக்குடியில் 141, கன்னியாகுமரியில் 115, விழுப்புரத்தில் 106, கோவையில் 87, தேனியில் 75, கடலூரில் 71, விருதுநகரில் 70 மற்றும் ராமநாதபுரத்தில் 65 பேருக்கும் புதிதாக வைரஸ் தொற்று உறுதி ஆனது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டும் 2 ஆயிரத்து 495 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் இது, சென்னையை காட்டிலும்  அதிகம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments