வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் எத்தனை கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன ? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

0 1536

தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் எத்தனை வழக்குகள், கொலை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறைச் செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேவுள்ள பொட்லுபட்டியைச் சேர்ந்த ஒருவர்தாக்கல் செய்த மனுவில், 2001 முதல் 2017 வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, கொலை வழக்காக பதியப்பட்ட வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு விவசாய நிலம்,வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டுமென கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கொலை வழக்குகளாக பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை? அதில் பாதிக்கப்பட்ட எத்தனை குடும்பத்தினருக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments