கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டுகோள் - மு.க. ஸ்டாலின் கோரிக்கை

0 1770

கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு, தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின் கட்டண உயர்வு தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், Tariff Slab  அடிப்படையில் புதிய மின்கட்டணம் வசூல் செய்வது நியாயமான நடவடிக்கை அல்ல என குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வீடுகளில் ரீடிங் எடுக்கப்படவில்லை என கூறியுள்ள மு.க.ஸ்டாலின், முந்தைய மாதத்தில் செலுத்திய மின்கட்டணத்திற்குரிய பணத்தைக் கழிப்பதற்கு பதிலாக, அந்தப் பணத் திற்குரிய 'ரீடிங்குகளை' கழித்து, மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கேரளாவில் வீட்டுப் பயன்பாட்டிற்கான 70 சதவீத மின்கட்ட ணத்தைச் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இது தவிர, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, மானி யம் அல்லது நீண்ட காலத் தவணை முறையில் மின்கட்டணம்  செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின்கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments