ஆன்லைன் பாடம் கற்பித்தலை எதிர்ப்பவர்கள் நாட்டு நலனுக்கு எதிரானவர்கள் - மும்பை உயர்நீதிமன்றம்

0 2521
குறைபாடுகள் இருந்தால் தொடர்புடையோரை அணுகும்படி அறிவுறுத்தல்

ஆன்லைனில் பாடம் நடத்துவதை எதிர்ப்பவர்கள், நாட்டு நலனுக்கு எதிரானவர்கள் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் கற்பிக்க அரசு வெளியிட்ட ஆணையை எதிர்த்து இம்ரான் சேக் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைனில் பாடம் கற்பித்தல், டிஜிட்டல் முறைக் கல்வியில் இந்தியாவை வலிமையாக்க உதவும் எனத் தெரிவித்தனர்.

21ஆம் நூற்றாண்டில் உலகமே மின்னாளுமை முறையில் ஆளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர். ஆன்லைன் முறையில் பாடம் கற்பிக்கும் அரசின் முடிவை எதிர்த்து உள்நோக்கத்துடன் கேள்வி கேட்கும் குடிமக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

நிலையான இயக்க நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது குறித்துத் தொடர்புடையோரிடம் முறையிடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments