11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு -சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

0 6694

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி, திமுக தொடந்த வழக்கில், 11 எம்எல்ஏக்கள் மற்றும் சட்டப்பேரவை செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ம் தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது. அதனையடுத்து ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

பின்னர் சபாநாயகர் 3 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் 11 எம்எல்ஏக்களும், சட்டசபை செயலாளரும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments