காங்கிரஸ் நடத்தும் அறக்கட்டளைகளில் நிதிச்சட்டங்கள் மீறப்பட்டனவா?

0 1992
காங்கிரஸ் அறக்கட்டளைகள் மீது விசாரணை

காங்கிரஸ் கட்சி நடத்தும் ராஜீவ் காந்தி பவுண்டேஷன், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவற்றில், ஐ.டி. விதிகள், வெளிநாட்டு நிதியுதவி விதிகள், சட்டவிராத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் ஆகிவற்றின் கீழ் விதிமீறல்கள் நடந்துள்ளனவா என விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கப்பிரிவின் சிறப்பு இயக்குநர் ஒருவரின் தலைமையில் இதற்காக அமைக்கப்பட உள்ள விசாரணைக் குழுவில் பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

சோனியா காந்தி தலைவராக இருக்கும் ராஜீவ் காந்தி பவுண்டேஷனுக்கு சீனாவில் இருந்து நிதியுதவி கிடைத்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கிக்கடன் மோசடியில் லண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி மெகுல் சோக்சி கடந்த 2014 ல் இந்த பவுண்டேஷனுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments