தமிழகம் முழுவதும் Friends of Police அமைப்புக்கு தடை

0 4542
தடை விதித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு உதவுவதற்காக 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற காவல்துறை நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த சிலரும் போலீசாருடன் இணைந்து தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தடை விதித்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, காவல் நிலையங்கள் மற்றும் ரோந்து பணிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை ஈடுபடுத்தக்கூடாது என்று காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் டிஜிபி அளித்த அறிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments