புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை ஊழியருக்கு கொரோனா
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் ஆளுநர் மாளிகை 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்ததால் ஆளுநர் மாளிகை ஊழியருக்கு தொற்று பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த மற்ற ஊழியர்களுக்கும் முறைப்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படாதபோதும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர், துணைநிலை ஆளுநர் அல்லது அவரது தனி அலுவலகத்துக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர் என்ற போதும் ஆளுநருக்கும் அவரது தனி அலுவலக ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
#BREAKING || புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கொரோனா
— Polimer News (@polimernews) July 8, 2020
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..
கொரோனா தொற்றால் புதுச்சேரி ஆளுநர் மாளிகை 2 நாட்களுக்கு மூடப்பட உள்ளது. #Puducherry | #CoronaVirus
Comments