நடிகர் விஷாலின் கணக்காளர் மீது மோசடி வழக்கு பதிவு..!
நடிகர் விஷால் அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், அவரது அலுவலக பெண் கணக்காளர் மீது காவல் நிலையத்தில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஷாலின் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா என்பவர், வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பணத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக கையாடல் செய்து 45 லட்சம் வரை மோசடி செய்ததாக மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்து இருந்தார்.
இதையடுத்து கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் கணக்குகளை சரிபார்க்கும் பணியில் விருகம்பாக்கம் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ரம்யா மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments