சமூக பரவல் இல்லாமல் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் உலகிலேயே இந்தியா முதலிடம்
சமூக பரவல் இல்லாமல், கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று வரையிலும் 7 லட்சத்து 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இருப்பினும், கொரோனா பரவலில் 3ம் நிலையான சமூக பரவல் என்ற கட்டத்தை இந்தியா இன்னும் எட்டவில்லை என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதேபோல் ரஷ்யா, பாகிஸ்தான், ஸ்பெயின், சவூதி அரேபியா, ஜெர்மனி, எகிப்து, குவைத் ஆகியவையும் சமூக பரவல் நிலை வரவில்லை என தெரிவித்து வருகின்றன.
இருப்பினும் அந்நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளது. அதுபோல சமூக பரவல் நிலை வராமல் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், ரஷ்யா 2ம் இடத்திலும் உள்ளன.
ஸ்பெயின், பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஜெர்மனி ஆகியவை 3 முதல் 6 வரையிலான இடங்களிலும் உள்ளன. இந்தியாவில் கடந்த 7 நாள்களாக சராசரியாக நாள்தோறும் சுமார் 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது சராசரியாக 7 நாள்களாக கொரோனா பாதிப்பு 3 புள்ளி 5 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது.
Comments