ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை சவுதி அரசு விதித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஆயிரம் பேருக்கு மட்டும் ஹஜ் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, புனித நீரான ஜம்ஜம் கிணற்று நீர் கண்டிப்பாக அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழுகை நடத்துவதற்கான விரிப்புகளை தாங்களே கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களால் மட்டுமே பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பு #Hajj | #SaudiArabia https://t.co/ExHIuFh62e
— Polimer News (@polimernews) July 8, 2020
Comments