11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

0 2212

தமிழக சட்டப்பேரவையில் 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரிய வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

2017ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து திமுகவின் சக்கரபாணி, தங்கத் தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் முடிவெடுக்குமாறு கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்திருந்தது. இந்நிலையில், திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments